மண் என்னும் மந்திரம் மொத்த பூமிப்பரப்பில் 32 பங்கில் ஒரு பங்கு தான் மனிதன் வாழக்கூடிய தகுதியான மண் ஆக உள்ளது . சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை , ஐவகையாக வகைப்படுத்தினர் . அவை குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் மற்றும் பாலை என்பனவாகும் . மருத நிலத்தை , வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக்கினர் . மண்ணின் இயல்புகளைக் கொண்டு , நிலங்களை மென்புலம் , பின்புலம் , வன்புலம் , உவர்நிலம் என்று வகைப்படுத்திருந்தனர் . விவசாயத்தில் , பயன்படுத்தும் ரசாயன உரங்கள் மண்ணிலுள்ள வளங்களை முழுமையாக பாதிக்கிறது . மண்ணிலுள்ள சத்துக்கள் குறைந்து , நுண்ணுயிர்கள் அழிவது மட்டுமின்றி , மண் மலட்டுத் தன்மையை பெறுகிறது . ரசாயன உரங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பயன்படுத்தும் பாலித்தீன் கவர்கள் , மண்ணுக்கு பெரும்பாதிப்பு ஏற்படுகிறது . மண்ணில் மக்கிப்போகாமல் இருக்கும் பாலித்தீன் கழிவு , மழைநீரை மண்ணுக்குள் இறங்க விடாமல் தடுத்து , மண் வளத்தையும் , சுற்றுச்சூழலையும் மாசடையச் செய்கிறது . சில விவசாயிகள் , ரசாயன உரத்தை முற்றிலும் புறந்தள்ளி , மண்ண...
Information about Indian agriculture and farming. Indian agriculture and farming support. Provides latest information in the field of agriculture and farming.