மண் என்னும் மந்திரம்
மொத்த பூமிப்பரப்பில் 32 பங்கில் ஒரு பங்கு தான்
மனிதன் வாழக்கூடிய தகுதியான மண் ஆக உள்ளது.
சங்க இலக்கியங்கள் தமிழக நிலத்தை, ஐவகையாக வகைப்படுத்தினர். அவை குறிஞ்சி, முல்லை
, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்பனவாகும்.
மருத நிலத்தை, வேளாண்மைக்கு ஏற்ற நிலமாக்கினர்.
மண்ணின் இயல்புகளைக் கொண்டு, நிலங்களை மென்புலம், பின்புலம், வன்புலம், உவர்நிலம் என்று வகைப்படுத்திருந்தனர்.
விவசாயத்தில், பயன்படுத்தும் ரசாயன உரங்கள் மண்ணிலுள்ள வளங்களை முழுமையாக பாதிக்கிறது. மண்ணிலுள்ள சத்துக்கள் குறைந்து, நுண்ணுயிர்கள் அழிவது மட்டுமின்றி, மண் மலட்டுத் தன்மையை
பெறுகிறது.
ரசாயன உரங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பயன்படுத்தும் பாலித்தீன் கவர்கள், மண்ணுக்கு பெரும்பாதிப்பு ஏற்படுகிறது.
மண்ணில் மக்கிப்போகாமல் இருக்கும் பாலித்தீன் கழிவு, மழைநீரை மண்ணுக்குள் இறங்க விடாமல் தடுத்து, மண் வளத்தையும், சுற்றுச்சூழலையும்
மாசடையச் செய்கிறது.
சில விவசாயிகள், ரசாயன உரத்தை முற்றிலும் புறந்தள்ளி, மண்ணுக்கும் மனிதனுக்கும் நன்மை பயக்கும், இயற்கை மற்றும் அங்கக உரங்களைப் பயன்படுத்தி விவசாயம்
செய்கின்றனர்.
மண்
பூமியில் உருவாக சுமாராக மூவாயிரம் ஆண்டுகள் வரை கால அவகாசம்
தேவைபடுகிறது என்று புவியியல் ஆய்வாளர்களால் கூறப்பட்டு வருகிறது மண்ணே அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறது மண்ணில்லையேல் புல்லில்லை
பூண்டில்லை
செடியில்லை
கொடியில்லை
மரமில்லை
இவை
இல்லையேல் மழையில்லை மழையில்லையேல்
நீரில்லை நீரில்லையேல் நிலம் செழிக்க வாய்ப்பில்லை.
நிலம்
செழித்து வளமடையாமல் போனால் தாவரங்களை ஆதாரமாக வைத்து வாழும் மனிதன்
உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் வாழ வழியில்லை
மனிதம்
வாழ மண் அவசியம் அவ்வாரான
மண்ணை நம் தலைமுறையில் நல்லமுறையில்
பயன்படுத்தி அடுத்த தலைமுறைகளுக்கு மண் என்ற வாழ்வாதார
பொக்கிஷத்தை மாசின்றி மிச்சம் வைக்க உறுதி எடுப்போம்.
Comments
Post a Comment